search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமிதாப் பச்சன்"

    • அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • அமிதாப் பச்சன் சண்டை காட்சி ஒன்றில் நடிக்கும்போது வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

     

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்


    இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.


    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    இந்த விவரங்களை அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். "மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் சமீபத்தில் ஒரு தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார்.
    • இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் சமீபத்தில் ஒரு தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

     

    டெல்லியில் இருக்கும் சுதந்திர மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேசியக்குழு அமிதாப்பச்சனுக்கு எதிராக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "நீங்கள் விளம்பரப்படுத்தி இருக்கும் பிஸ்கட் கோதுமையில் தயாரிக்கப்பட்டது என்று கூறியதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் வீட்டில் சமைத்த தரமான சத்தான உணவுகளை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இது இருக்கிறது.


    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    பிஸ்கட் அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக சோடியம் ஆகியவற்றால் ஆனது. இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல. உலக சுகாதார அமைப்பு வரையறுக்கப்பட்ட விதிகளில் இது இல்லை. குழந்தைகளைத் தாக்கும் அதிக உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இன்னும் எதிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் நோய்களுக்கும் எளிதில் வழி வகுக்கும். அதனால் இந்த விளம்பரம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பாதிக்கும் என்று அஞ்சுகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்கடிதத்திற்கு அமிதாப்பச்சன் தரப்பிலிருந்து இன்னும் பதில் அளிக்கவில்லை. இதனால் அடுத்த வாரம் 2ம் கடிதத்தை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன்.
    • இவர் இரண்டுமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் இவரும் ஒருவர். இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குட்பை', 'பிரம்மாஸ்திரா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அமிதாப் பச்சன்

    இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, அமிதாப் பச்சனின் பெயரில் போலி கோட்டீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுவதாகவும் இவரின் புகைப்படத்தை போஸ்டர்கள், ஆடைகள் போன்றவற்றில் உபயோகிப்பதனால் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.


    அமிதாப் பச்சன்

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன்.
    • இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தனது சிறந்த நடிப்பாற்றலால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வரும் இவர் இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.


    அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்

    இவருக்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "தி லெஜண்ட். என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அன்பும் மரியாதையும் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் அமிதாப் பச்சனும் ஒருவர்.

    பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் அமிதாப் பச்சனும் ஒருவர். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழட்டும்.

    இந்தி திரையுலகில் 80 வயதிலும், பச்சன் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதே சமயம் ஆண்டாண்டு காலமாக மிகவும் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடரான 'கவுன் பனேகா குரோர்பதி' தொடர்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று இரவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது.
    • பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றல் பாதிக்கபட்டு மீண்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

    7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது வழக்கமான பணிக்கு திரும்பியதாக கூறி உள்ளார். குணமடைவதற்காக வாழ்த்தி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

    அமிதாப் அடுத்ததாக அயன் முகர்ஜியின் 'பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: ஷிவா', விகாஸ் பாஹ்லின் 'குட்பை' 'உஞ்சாய்' மற்றும் 'புராஜெக்ட் கே' ஆகிய படங்களில் நடிக்கிறார்.

    • தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தல்.
    • கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றார்.

    மும்பை:

    உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-ஐரோப்பா காலாச்சாரங்களுக்கு பாலமாக திகழ்ந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஐரோப்பிய யூனியன் விருது வழங்கப்பட்டுள்ளது. #AmitabhBachchan #EuropeanUnion
    மும்பை:

    இந்தி திரைப்பட உலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனிக்கு ஐரோப்பிய யூனியன் சார்பாக விருது வழங்கப்பட்டது.

    ஐரோப்பிய யூனியன் சார்பாக நேற்று மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஐரோப்பிய யூனியன் தூதரகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பச்சனுக்கு, இந்தியா-ஐரோப்பிய கலாச்சாரங்கள் மேம்படும் வகையில் பணியாற்றி, பாலமாக விளங்கியதற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் அமிதாப் பச்சனுடன் அவரது மகள் ஸ்வேதா பச்சன் கலந்து கொண்டார்.



    இதுகுறித்து டுவிட் செய்துள்ள அமிதாப், விருது வழங்கியதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு நன்றி தெரிவித்தார். #AmitabhBachchan #EuropeanUnion
    ×